WLM அத்தியாயம் 3
‘வேண்டாம் வேண்டாம் என்றாலும் என் விதி ஏனோ அவனோடேயே என்னை கொண்டு போய் கோர்த்து விட்டுக்கொண்டிருந்தது. அவன் என்னில் ஈர்க்கப்பட்டிருக்கிறானா இல்லையா? நான் ஏன் அவனையே கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எதற்குமே எனக்கு அப்போது விடை சொல்லத்தெரியவில்லை. அவனோடு அன்றைக்கு இருளில் மறைந்திருக்க நேரிட்டபோது எனக்கு அவனிடம் இருந்த தயக்கமொன்று விடைபெற்று செல்ல அவனை நோக்கி ஓரடி மனத்தால் எடுத்து வைத்திருந்தேன். அது அப்போது எனக்கு புரியவில்லை.’ அன்றிரவு டைனிங் ஹாலில் சாப்பிட்ட பிறகு ஹாஸ்டலுக்கு முன்னே இருந்த …