Responsive Menu
Add more content here...

என் வாசகர்களுக்கு

ஒரு கலைஞனின் கலை வாழ்வை பெரும்பாலும் ஒரு விமானத்தின் பயணத்துடன் ஒப்பிடுவார்கள். அது எப்போதும் வானபெருவெளியில் உயரமாய் பறந்துகொண்டே இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது தரையிறங்கித்தான் ஆகவேண்டும். எழுத்தாளர்களுக்கும் அத்தரையிறக்கம் நிகழும். என்றோ ஒரு நாள் பேனாவுக்கு மை தீரக்கூடும். இல்லையேல் வாசகர்களுக்கு வேண்டியதை எழுத்துக்கள் பேனாவிற்கு தெரிந்திருக்காது. அந்த விடைபெறும் தருணம் இரு தரப்புக்கும் இனிதாய் அமைவது வரம். பல கலைஞர்கள் வேண்டும் வரம். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. உங்கள் வாழ்வில் சின்னதாய் வெகு சின்னதாயேனும் ஒரு தாக்கத்தை உருவாக்கியவளாக, உங்கள் வாழ்க்கையின் பாலைவனத் தருணங்களில் சின்ன புன்னகையை மலர்வித்தவளாய் நான் நினைவு கூரப்பட வேண்டும் என்பது தான் என் ஆசை.

பெண்மையில் ஆரம்பித்து என் பல்வேறு வலைப்பூக்கள், கிண்டில் வரை நீங்கள் என்மேல் பொழிந்த அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த இணையத்தளம் நாம் பல ஆண்டுகளாகப் பேணி வளர்த்த அந்த அழகான உறவுக்கான ஒரு சிறிய சாமர்ப்பணமாய் அமைந்திருக்கட்டும் .

பேசுங்கள், அன்பாய், நேர்மறையாய்..

நாவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன், உஷ்!

error: Content is protected !!