WLM அத்தியாயம் 22

“சட்டென என் வாழ்க்கையில் யாரோ மந்திரக்கோலை பிடித்து ஆட்டி போயின போயின துன்பங்கள் என்று சொன்னதைப்போல எப்படியோ எல்லாமே அதனதன் இடத்தில் கச்சிதமாய் போருந்திப்போயிருந்தன. இனிமேல் நான் நேசித்தவர்கள் எல்லாருமே எனக்கே எனக்குத்தான். அருகில் இருந்தவனின் புஜத்தினை என் முகத்தோடு சேர்த்து இறுக பிடித்துக்கொண்டேன். இனி ஆயுளுக்கும் விட்டு விடும் எண்ணம் இல்லாமல்!” இரண்டு மாதங்களின் பின்னொரு நாள்… வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக சகல சாமான்களையும் பாக் செய்து தயாராய் வைத்து விட்டு ஹாஸ்டலை சுற்றிக்கொண்டு நடந்து …

WLM அத்தியாயம் 21

“ஆசைப்பட்டு கேட்பதெல்லாம் கேட்கும் நேரத்தில் கிடைக்காமல் நாம் எதிர்பாராத ஒரு தருணத்தில் நம் தலையில் வலிய வந்து பொழிவது தான் வாழ்க்கை போலும்.  நானும் அப்படியொரு தருணத்தை தான் அன்றைக்கு சந்தித்தேன்.” அடுத்த வாரம் முழுக்க அவனுக்கு நரக நாட்களாய் தான் நகர்ந்தது. இனிமேல் எதை எப்படி நகர்த்தப்போகிறேன் என்று அவனுக்கு புரியவே இல்லை. மைதிலியிடம் இருந்து வரும் மெசேஜ்கள் தான் அவனை கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்திருந்தன. “இன்றோடு கைக்கட்டுக்கு விடுதலை. ஆனால் இடக்கை கொஞ்சம் வளைந்து …

WLM அத்தியாயம் 19

“பெரிய இவள் போல அவனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி விட்டேன். ஆனால் உள்ளேயோ என் மனம் உலைக்களத்தில் கொதித்துக்கொண்டு  இருந்தது. அம்மா என்னை  திட்டியதுண்டு, ஏன் அடித்தது கூட உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் கண்டிப்பு தான் தெரியுமே தவிர இப்படி வெறுப்பாக பேசியதேயில்லை. கண்களை முட்டி வழியத்துடித்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன்! வரும் நாட்களில் வாழ்க்கை எனக்கு எதையெல்லாம் வைத்துக்கொண்டு காத்திருக்கிறதோ எனக்கு சுத்தமாய் தெரியவில்லை” ஒற்றைக்கையில் கட்டுடன் ஒரு பையை தூக்க முயற்சித்தவளை கண்டுவிட்டு காண்டீனில் …

WLM அத்தியாயம் 20

“என்னதான் திட்டம் போட்டாலும் எல்லாமே அந்த திட்டப்படியே தான் நடந்தாலும் முடிவுரையை மட்டும் விதி தலைகீழாக எழுத்து விடுவது என் விஷயத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே. இந்த தடவையாவது நான் நினைத்தது சரியாக நடக்குமா? நானும் அவளும் ஒன்றாக சேருவோமா? எனக்கு அதைப்பற்றி சிந்திக்கவே பயமாக இருந்தது.” கிளிநொச்சி சென்ட் மேரிஸ் கல்லூரியின் இரண்டாம் மாடியில் நின்றுகொண்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிந்தக்க. சுற்றிலும் காடு தான் கண்ணுக்கு தெரிந்தது. சும்மாவே வன்னிப்பெருநிலப்பரப்பு காடுகளை அதிகம் கொண்டிருக்கும். இதில் …

WLM அத்தியாயம் 18

இந்த தடவை நம்மிடைய எந்த ஒளிவு மறைவும் இல்லாததாலும் இருவரிடமுமே எதிர்காலம் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு வளர்ந்திருந்ததாலும் பிரிவு பெரிதாக தெரியவில்லை. அதை விட என்னவன் நல்லவன் என்ற கர்வமே என் மனம் முழுதும் நிறைந்து கிடந்தது. இன்னும் நான்கு மாதங்களை ஒருவழியாய் ஓட்டி பட்டப்படிப்பை முடித்து விட்டு அவனோடு வாழும் கனவுகளை நான் கண்களில் பூட்டிக்கொண்டிருக்க விதி தானும் தன் போக்கில் எங்களுக்காய் ஒரு வேலை செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தது. மைத்தி!!! சீக்கிரம் …

WLM அத்தியாயம் 17

There will be no ‘us’ in future..இவ்வளவு நாளும் நானே அதை முடிவு செய்து அதற்கேற்றபடி நடந்தும் வந்தேன் என்பதை மறந்து நான் அசைவற்று நின்று கொண்டிருந்தேன். இனிமேல் இவனை பிரிந்து வாழ்வது எனக்கு சாத்தியமாகுமா? எனக்கு நீதி வேண்டும் என்று அடம்பிடித்து இப்படியொரு நிலைக்கு அவளை கொண்டு வந்து விட்டு இன்னும் ஐந்து நாட்களுக்கு பின் நாம் பார்ப்போமா மாட்டோமா என்றே தெரியாது என்று எவ்வளவு சாதாரணமாக சொல்கிறான்! இறைவனே என் காலத்தை இந்தப்புள்ளியிலேயே …

WLM அத்தியாயம் 16

16 நானும் அவளும் இணைந்து வாழும் வாழ்வு இனிமையாக இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறேன் ஆனால் இப்படியொரு வாழ்க்கையை நிச்சயமாய் நான் கற்பனை செய்யவே இல்லை.. இவ்வளவு அழகான ஒரு கனவு எங்காவது இருக்க முடியுமா? கனவே அப்படிஎன்றால் அது நனவானால் எப்படி இருக்கும்? அதுதான்  இவ்வளவு போராட்டங்களையும் மனக்கஷ்டங்களையும் நாங்கள் சந்திக்கின்றோமோ  என்னவோ? தாளமுடியாமல் அவளது கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு அவளின் நெற்றியில்  லேசாக ஓரங்களில் பசையிழந்து உரிய ஆரம்பித்திருந்த பிளாஸ்திரியை விரல்களால் அழுத்தம் …

WLM அத்தியாயம் 15

“நாங்கள் காதலித்த காலத்தில் கூட அதிகமாய் ஒன்றாக  இருந்ததோ சுதந்திரமாக கலகலவென்று பேசிக்கொண்டதோ கிடையாது. ஆனால் இன்றைக்கு அந்த வீட்டில் அவனுடனான எனது தருணங்களில் என் வீட்டில் என் பெற்றோரோடு நான் இருக்கும் தளர்வும் ஆசுவாசமும் என்னையறியாமலே பற்றிக்கொள்ள என் நாவுப்பூட்டு கழன்று கொண்டிருந்தது. அவனிடம் என்னை மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன்.” பாதிச்சிரிப்பு உதட்டிலேயே உறைந்து போக “நான் வெளியே இருக்கேன்” என்று முணுமுணுத்துவிட்டு நெஸ்டமோல்ட் கப்பை எடுத்துக்கொண்டு கீழே ஹாலுக்கு வந்தாள் மைதிலி. மனமும் நாவும் உன் …

WLM அத்தியாயம் 14

ஒவ்வொரு தடவையும் நான் அவனை விட்டு விலகிச்செல்லும் போதெல்லாம் விதிவசத்தால் எப்படியோ அவனருகிலேயே மீண்டும் மீண்டும் போய் சேர்ந்துகொண்டிருந்தேன். எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்குமாமே.. அப்படியாயின் எங்கள் இருவரின் எண்ணங்களும் அறிவின் திட்டங்களை விட மிக மிகப்பலமானவையாய் இருந்திருக்க வேண்டும்!நாங்கள் மீண்டும் மீண்டும் சந்தித்துக்கொண்டே இருந்தோம். மசமசவென்ற இருளுக்குள் ஆங்காங்கே மரங்கள் அடர்ந்து கிடக்க நடுவிலேயே காட்டாறு பொங்கி வழிந்து கொண்டிருந்தது. சின்னச்சின்ன விலங்குகள் எல்லாம் பதறி ஓடி அருகே இருந்த மரங்களில் தொற்றிக்கொள்ள சாம்பல் வர்ணமான …