WLM அத்தியாயம் 12

அவசரப்படுகிறேனோ? இது கூட  ஒரு வகையில்  ஆபத்தான அறுவைச்சிகிச்சை தான். பலனளிக்கலாம்..பலனளிக்காவிட்டால் உயிரே போய் விடலாம். ஆனாலும் அவன் துணிந்து விட்டான். இன்னும் ஒரே ஒரு தடவை போராடிப்பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான். அவன் மீது பற்றிக்கொண்ட நெருப்பை அணைக்கக்கூடியவளே தானும் கூடச்சேர்ந்து எரியும் போது, இருவரின் வாழ்வுக்காகவும் இனி அவன் தானே முயன்றாக வேண்டும்? மச்சா…மே அஹன்னப்பங்!!!! மறுமுனையில் அலறிய ராஜீவின் குரலை காதில் வாங்காதவனாய் “நீ ஹெல்ப் பண்ணறதுன்னா பண்ணு. …

WLM அத்தியாயம் 11

நீ பிரிந்து போனபோது ஒரு கையாலாகாதவனாய்த்தான் கைகட்டி கண்ணீரோடு நின்றேன். நீ திரும்பி எனக்காக வருவாய் என்பதை மந்திரம் போல மனதில் உச்சரித்துக்கொண்டே வெறித்தனமாய் உழைத்தேன். என் கம்பனிப்பெயரை “மச்சி” என்று மாற்றியபோது எல்லோரும் இளையவர்கள் மனதைக்கவரும் சொல்லை நான் கண்டுபிடித்து வெற்றிக்கனியை பறித்துவிட்டதாக  என்னை புகழும் போது வாய்விட்டு சிரிக்கத்தான்  தோன்றும் எனக்கு! அந்த சொல்லில் நீயும் நானும் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கெல்லாம் புரியுமா என்ன? . வெறும் பெயராக உடனிருந்தே என்னை வெற்றியெனும் …

WLM அத்தியாயம் 10

“சூழ்நிலைக்கைதியாக நின்றுகொண்டிருப்பது என்றால் என்னவென்று இன்றைக்குத்தான் நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அத்தோடு காதலி பிரிந்து செல்லும் வலியையும்! ஆம். அவள் என்னை விட்டு மொத்தமாய் விலகி விட்டாள். நான் கூட கண்ணீர் விட்டு அழுவேன் என்று எனக்கு தெரியவைக்க அவள்  என் வாழ்க்கையில் வரவேண்டியிருந்தது  போலும்!“ ‘ஸ்குவீசீசுக்கு’ முன்னே நின்று கொண்டு வண்டியை முறுக்கிக்கொண்டிருந்தான் சிந்தக. ராஜீவின் சலனத்தையே கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை. அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்தது. என்ன ஆயிற்று மைதிலிக்கு? இரண்டு வாரங்களாக …

WLM அத்தியாயம் 9

மீனுக்கு உணவு இல்லாவிட்டால் அது எப்படியோ அழுக்குகளை உண்டாவது சமாளித்துக்கொள்ளும். ஆனால் அதனுடைய வீடான நீரில் இருந்து தரைக்கு போய் வாழ நினைத்தால்  செத்து விடும் என்ற எண்ணத்தை மனதில் உருவேற்றியே அப்போதெல்லாம் நான் அவனை நினைக்காதிருக்க என் மனதை தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் எது நீர் எது உணவு என்பதை அப்படியே தலைகீழாக புரிந்து வைத்திருந்தேன் என்பது பிரிந்து வந்தபின் தானே புரிகிறது! ஒரு வாரம் ஓடிப்போயிருந்தது. மைதிலி இப்படியொரு உணர்வை இதுவரை அனுபவித்ததே இல்லை. சுமி …

WLM அத்தியாயம் 8

“அவள் பாக்டரிக்கு வந்த நாளன்று  தான் என் வாழ்க்கை இனி முன் போல் இருக்கப்போவதில்லை என்று உணர்ந்து கொண்டேன்.  அவள் எனை விட்டுப்போன பின்னர் என் வாழ்க்கையில் நான் செய்த அத்தனை பாய்ச்சல்களுக்கும் அத்திபாரமிட்டது அந்த நாள் தான். அவள் ஆசையாய் உலாவிய என் மாதுளை நிலம் தான் அவள் மூலை முடுக்குகளெல்லாம் உலவித்திரிந்த என் வீட்டை விட அவளை அதிகம் நினைவுறுத்திக்கொண்டிருந்தது.” அவள் தன் கண்ணை விட்டு மறைந்ததுமே இந்த இனிமை அவனுக்கு நிலைக்குமா? என்ற …

WLM அத்தியாயம் 7

“அந்த நிகழ்வு பல்வேறு வகைகளில் என்னை நெகிழ்த்தி விட்டிருந்தது. இனமத வேறுபாடின்றி ஒரே போல துடித்து பதறி ஒன்றாக சேர்ந்து நிலாவையும் சிந்துவையும் காப்பாற்றி அழைத்து வந்தது, நாமெல்லாம் ஒன்று போன்ற ஒரு ஒற்றுமை உணர்வையே அந்த வாரம் முழுவதும் ஹாஸ்டலில் தோற்றுவித்திருந்தது. நாட்டுநிலவரங்களை கேளாமல்  எனக்கு நானே தடை விதித்திருந்ததும் அவனின் அருமை பெருமைகளை அந்த வாரம் முழுக்க நிலா அபிநயித்துக்கொண்டிருந்ததும் கூட இதற்கு காரணங்களாகியிருக்கலாம். ஆக மொத்தத்தில் அந்த சனிக்கிழமை சிந்தகவை பார்க்க நான்  …

WLM அத்தியாயம் 6

“வேண்டும்..வேண்டாம் என்ற இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த நான் அவனுக்கு நான் வேண்டுமா வேண்டாமா என்பதை எண்ணிப்பார்க்க மறந்து விட்டேன் போலிருக்கிறது. நாங்கள் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு போகும் நாட்களிலெல்லாம் அவன் தலைமறைவாகிக்கொண்டே இருந்ததில் எங்கள் farm family ப்ராஜெக்டில் என்னைத்தவிர மீதிப்பேரின் பங்கு ஏறக்குறைய நிறைவு பெற்றிருந்தது. அவன் ஏன் என்மீது இத்தனை கோபமாக இருக்கிறான் என்பதைத்தான்  என்னால் ஊகிக்கவே முடியவில்லை!” மரவள்ளிக்கிழங்குகளை மஞ்சள் உப்பிட்டு அவித்து துண்டுகளாக்கி வெறுமனே வெங்காயம் , சிவப்பு மிளகாய் …

WLM அத்தியாயம் 4

“எனக்கு “சின்னச்சின்ன ஆசை” பாடல் ரொம்பவும் பிடிக்கும். எனக்கு தமிழ் புரியாது, தமிழனையும் தெரியாது..ஆனால் அந்த இசையும் அதிலிருந்த ஜீவனும் எனக்கு ரொம்பவே நெருக்கம். மைதிலி..அவளை முதன் முதலில் கண்டபோது அந்தப்பாடல் தான் எனக்கு மனதில் வந்தது. அந்த ஜீவன் அவளிடம் இருப்பதாய் தோன்றியது. அவளை பார்க்கப்பிடித்திருந்தது, ரசிக்கப்பிடித்திருந்தது..தயக்கமின்றி செய்தேன். ஆனால் என்னுடைய சிறிய வட்டத்தில் வேலை, முன்னேற்றம் நிம்மதி என்றிருந்த என் வாழ்வில் அதுவே புயலாய் வீச ஆரம்பிக்கும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை” “மச்சா…சுஷாந்த் வர்றேன்னு …

WLM அத்தியாயம் 5

“அவன் என்னை அப்படி பிடித்து இழுத்துக்கொள்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அதை விட என்னை அணைத்தவனின் நெஞ்சிலேயே அப்படியே சாய்ந்து கொள்ளவேண்டும் என்று எனக்குள் எழுந்த தவிப்பில் தான் நான் அதிர்ந்து போனேன். என்னுடைய நிலைமையின் பார தூரம் புரிந்தது. அழ ஆரம்பித்தேன். அவன் கோபமாய் கிளம்பிப்போய்விட்டான். அதன் பிறகு என்னால் அங்கே பொருந்தியிருக்கவே முடியவில்லை.” சமந்த அங்கிளுக்கு நன்றி சொல்லிவிட்டு சைக்கிளை பார்க்கில் விட்ட மைதிலியின் கண்கள் தன் நண்பிகளின் சைக்கிள் நிற்குமிடத்தை …