WLM அத்தியாயம் 11

நீ பிரிந்து போனபோது ஒரு கையாலாகாதவனாய்த்தான் கைகட்டி கண்ணீரோடு நின்றேன். நீ திரும்பி எனக்காக வருவாய் என்பதை மந்திரம் போல மனதில் உச்சரித்துக்கொண்டே வெறித்தனமாய் உழைத்தேன். என் கம்பனிப்பெயரை “மச்சி” என்று மாற்றியபோது எல்லோரும் இளையவர்கள் மனதைக்கவரும் சொல்லை நான் கண்டுபிடித்து வெற்றிக்கனியை பறித்துவிட்டதாக  என்னை புகழும் போது வாய்விட்டு சிரிக்கத்தான்  தோன்றும் எனக்கு! அந்த சொல்லில் நீயும் நானும் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கெல்லாம் புரியுமா என்ன? . வெறும் பெயராக உடனிருந்தே என்னை வெற்றியெனும் …

WLM அத்தியாயம் 10

“சூழ்நிலைக்கைதியாக நின்றுகொண்டிருப்பது என்றால் என்னவென்று இன்றைக்குத்தான் நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அத்தோடு காதலி பிரிந்து செல்லும் வலியையும்! ஆம். அவள் என்னை விட்டு மொத்தமாய் விலகி விட்டாள். நான் கூட கண்ணீர் விட்டு அழுவேன் என்று எனக்கு தெரியவைக்க அவள்  என் வாழ்க்கையில் வரவேண்டியிருந்தது  போலும்!“ ‘ஸ்குவீசீசுக்கு’ முன்னே நின்று கொண்டு வண்டியை முறுக்கிக்கொண்டிருந்தான் சிந்தக. ராஜீவின் சலனத்தையே கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை. அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்தது. என்ன ஆயிற்று மைதிலிக்கு? இரண்டு வாரங்களாக …

WLM அத்தியாயம் 9

மீனுக்கு உணவு இல்லாவிட்டால் அது எப்படியோ அழுக்குகளை உண்டாவது சமாளித்துக்கொள்ளும். ஆனால் அதனுடைய வீடான நீரில் இருந்து தரைக்கு போய் வாழ நினைத்தால்  செத்து விடும் என்ற எண்ணத்தை மனதில் உருவேற்றியே அப்போதெல்லாம் நான் அவனை நினைக்காதிருக்க என் மனதை தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் எது நீர் எது உணவு என்பதை அப்படியே தலைகீழாக புரிந்து வைத்திருந்தேன் என்பது பிரிந்து வந்தபின் தானே புரிகிறது! ஒரு வாரம் ஓடிப்போயிருந்தது. மைதிலி இப்படியொரு உணர்வை இதுவரை அனுபவித்ததே இல்லை. சுமி …

WLM அத்தியாயம் 8

“அவள் பாக்டரிக்கு வந்த நாளன்று  தான் என் வாழ்க்கை இனி முன் போல் இருக்கப்போவதில்லை என்று உணர்ந்து கொண்டேன்.  அவள் எனை விட்டுப்போன பின்னர் என் வாழ்க்கையில் நான் செய்த அத்தனை பாய்ச்சல்களுக்கும் அத்திபாரமிட்டது அந்த நாள் தான். அவள் ஆசையாய் உலாவிய என் மாதுளை நிலம் தான் அவள் மூலை முடுக்குகளெல்லாம் உலவித்திரிந்த என் வீட்டை விட அவளை அதிகம் நினைவுறுத்திக்கொண்டிருந்தது.” அவள் தன் கண்ணை விட்டு மறைந்ததுமே இந்த இனிமை அவனுக்கு நிலைக்குமா? என்ற …

WLM அத்தியாயம் 7

“அந்த நிகழ்வு பல்வேறு வகைகளில் என்னை நெகிழ்த்தி விட்டிருந்தது. இனமத வேறுபாடின்றி ஒரே போல துடித்து பதறி ஒன்றாக சேர்ந்து நிலாவையும் சிந்துவையும் காப்பாற்றி அழைத்து வந்தது, நாமெல்லாம் ஒன்று போன்ற ஒரு ஒற்றுமை உணர்வையே அந்த வாரம் முழுவதும் ஹாஸ்டலில் தோற்றுவித்திருந்தது. நாட்டுநிலவரங்களை கேளாமல்  எனக்கு நானே தடை விதித்திருந்ததும் அவனின் அருமை பெருமைகளை அந்த வாரம் முழுக்க நிலா அபிநயித்துக்கொண்டிருந்ததும் கூட இதற்கு காரணங்களாகியிருக்கலாம். ஆக மொத்தத்தில் அந்த சனிக்கிழமை சிந்தகவை பார்க்க நான்  …

WLM அத்தியாயம் 6

“வேண்டும்..வேண்டாம் என்ற இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த நான் அவனுக்கு நான் வேண்டுமா வேண்டாமா என்பதை எண்ணிப்பார்க்க மறந்து விட்டேன் போலிருக்கிறது. நாங்கள் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு போகும் நாட்களிலெல்லாம் அவன் தலைமறைவாகிக்கொண்டே இருந்ததில் எங்கள் farm family ப்ராஜெக்டில் என்னைத்தவிர மீதிப்பேரின் பங்கு ஏறக்குறைய நிறைவு பெற்றிருந்தது. அவன் ஏன் என்மீது இத்தனை கோபமாக இருக்கிறான் என்பதைத்தான்  என்னால் ஊகிக்கவே முடியவில்லை!” மரவள்ளிக்கிழங்குகளை மஞ்சள் உப்பிட்டு அவித்து துண்டுகளாக்கி வெறுமனே வெங்காயம் , சிவப்பு மிளகாய் …

WLM அத்தியாயம் 4

“எனக்கு “சின்னச்சின்ன ஆசை” பாடல் ரொம்பவும் பிடிக்கும். எனக்கு தமிழ் புரியாது, தமிழனையும் தெரியாது..ஆனால் அந்த இசையும் அதிலிருந்த ஜீவனும் எனக்கு ரொம்பவே நெருக்கம். மைதிலி..அவளை முதன் முதலில் கண்டபோது அந்தப்பாடல் தான் எனக்கு மனதில் வந்தது. அந்த ஜீவன் அவளிடம் இருப்பதாய் தோன்றியது. அவளை பார்க்கப்பிடித்திருந்தது, ரசிக்கப்பிடித்திருந்தது..தயக்கமின்றி செய்தேன். ஆனால் என்னுடைய சிறிய வட்டத்தில் வேலை, முன்னேற்றம் நிம்மதி என்றிருந்த என் வாழ்வில் அதுவே புயலாய் வீச ஆரம்பிக்கும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை” “மச்சா…சுஷாந்த் வர்றேன்னு …

WLM அத்தியாயம் 5

“அவன் என்னை அப்படி பிடித்து இழுத்துக்கொள்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அதை விட என்னை அணைத்தவனின் நெஞ்சிலேயே அப்படியே சாய்ந்து கொள்ளவேண்டும் என்று எனக்குள் எழுந்த தவிப்பில் தான் நான் அதிர்ந்து போனேன். என்னுடைய நிலைமையின் பார தூரம் புரிந்தது. அழ ஆரம்பித்தேன். அவன் கோபமாய் கிளம்பிப்போய்விட்டான். அதன் பிறகு என்னால் அங்கே பொருந்தியிருக்கவே முடியவில்லை.” சமந்த அங்கிளுக்கு நன்றி சொல்லிவிட்டு சைக்கிளை பார்க்கில் விட்ட மைதிலியின் கண்கள் தன் நண்பிகளின் சைக்கிள் நிற்குமிடத்தை …

WLM அத்தியாயம் 3

‘வேண்டாம் வேண்டாம் என்றாலும் என் விதி ஏனோ அவனோடேயே என்னை கொண்டு போய் கோர்த்து விட்டுக்கொண்டிருந்தது. அவன் என்னில் ஈர்க்கப்பட்டிருக்கிறானா இல்லையா? நான் ஏன் அவனையே கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எதற்குமே எனக்கு அப்போது விடை சொல்லத்தெரியவில்லை. அவனோடு அன்றைக்கு  இருளில் மறைந்திருக்க நேரிட்டபோது எனக்கு அவனிடம் இருந்த தயக்கமொன்று விடைபெற்று செல்ல அவனை நோக்கி ஓரடி மனத்தால் எடுத்து வைத்திருந்தேன். அது அப்போது எனக்கு புரியவில்லை.’ அன்றிரவு டைனிங் ஹாலில் சாப்பிட்ட பிறகு ஹாஸ்டலுக்கு முன்னே இருந்த …

WLM அத்தியாயம் 2

‘அவனை நான் மூன்று வருடங்களின் முன் இது போன்ற ஒரு வெள்ளிக்கிழமை தான் முதன் முதலில் சந்தித்தேன்..ஒரு நீதிபதியின் மகள் சந்திக்காத மனித வகையினரா என்ன? என் பத்தொன்பதாவது வயதில், என் உலகமும் மொழியும் புரியாத, ஒரு சின்ன செங்கல் வீட்டுக்குள் வாழும்,  எளிய மனிதனொருவன் முதற் சந்திப்பிலேயே என் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடுவான் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை’ 2009 January “ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு விவசாய குடும்பம் ஒதுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு இந்த செயன்முறை …