WLM அத்தியாயம் 1
“நான் ஏன் இங்கு வந்தேன் என்று எனக்கே தெளிவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னே என் நெஞ்சில் மலர்ந்த பூ கருகிவிட்டது என்று தான் எண்ணியிருந்தேன்…ஆனால் இரவின் குளிரில் , தனிமையில் அதன் வாசம் வருவதை உணரும் போது தான் அது கருகும் பூ அல்ல என்று புரிந்து கொண்டேன். என்ன செய்வது? எல்லாப்பூக்களும் பூஜைக்கு செல்வதில்லையே..இறுதியாக ஒரே ஒரு தடவை அவன் முகத்தை பார்த்து விட வேண்டும். அது போதும் எனக்கு!” மகா இல்லுப்பள்ளம பெண்கள் ஹாஸ்டலின் …